
சில வரலாறுகளைப் பார்த்து சில வரலாறுகளைப் புரட்டி, சில வரலாறுகளைப் படைத்து, சில வரலாற்றுகளை இரசித்த போது நம்மிடமுள்ள ஒரு வரலாற்றோடு ஒன்றியத்தின் விளைவு தான் இந்த வரலாறு. அது தான் எமது ஆலயத்தின் வரலாறு.

முதல் ஆலயம்
சில வரலாறுகளைப் பார்த்து சில வரலாறுகளைப் புரட்டி, சில வரலாறுகளைப் படைத்து, சில வரலாற்றுகளை இரசித்த போது நம்மிடமுள்ள ஒரு வரலாற்றோடு ஒன்றியத்தின் விளைவு தான் இந்த வரலாறு. அது தான் எமது ஆலயத்தின் வரலாறு.
1634 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் பல தேவாலயங்களை கட்டினர். அதில் பதினோராவது ஆலயம் சுண்டுக்குளி புனித திருமுழுக்கு ஜோவான் பெயரால் நிறுவப்பட்டதாகும்.இது தற்போது ஆலயம் இருக்கும் இடத்திற்கு சற்றே தென்கிழக்காக ஏறக்குறைய இருநூறு யார் தூரத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. ஒல்லாந்தர் ஆட்சி புரிந்த காலத்தில் அவர்களால் பல கத்தோலிக்க ஆலயங்கள் அழிக்கப்பட்டும், பறிமுதல் செய்யப்பட்டும் போயின. இவற்றுள் சுண்டுக்குளி புனித திருமுழுக்கு ஜோவான் ஆலயமும் ஒன்றாகும். இவ்வட்டூழியம் நிகழ்ந்த போது ஆலயத்தில் இருந்த புனிதரின் புதுமை சுரூபத்தைக் கத்தோலிக்கர் எடுத்து அதைப் பரிசுத்தமாய்ப் பேணிக்காத்து வந்தனர். தருணம் கிடைத்த போது பிரபுக்கள் குடியிருப்பு என அழைக்கப்பட்ட இடத்தில் அதாவது தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சிறிய கொட்டிலால் ஆன ஆலயத்தை அமைத்து அதிலே மேற்கூறப்பட்ட புதுமை சுரூபத்தையும் எடுத்து வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
தற்போதைய ஆலயம்
1976ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சி ஏற்பட்டு ஓரளவு மத சுகந்திரத்திற்கு வாய்ப்பும் ஏற்பட்டது . இறை ஊழியத்துக்கு தம்மையே அர்ப்பணித்த கோவை தியானசபைக் குருமார் பல இடங்களிலும் கல்லாலான புதிய ஆலயங்களை கட்டிடத்தொடங்கினர். இவற்றை கண்ணுற்ற சுண்டுக்குளி வாழ் இறை மக்களும் அன்பர்களும் தமது பரலோக பூலோக பாதுகாவலரான புனித திருமுழுக்கு ஜோவானுக்கு புதிய கலைவடிவம் பொருந்திய அழகிய ஆலயத்தைக் கட்டத் திடசங்கற்பம் பூண்டு செல்வமும் நல்லுள்ளமும் படைத்தவர்களின் உதவியை நாடினர்.
கட்டிட ஆரம்பம்
1888ம் ஆண்டு யாழ். பேராலயத்தின் மூப்பரும் முதலியருமான உயர்திரு. ஜோசவ் புவிமனசிங்கி அவர்களால் புதிய ஆலயத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. சுண்டுக்குளி புனித திருமுழுக்கு ஜோவான் ஆலயத்தின் முதலாவது மூப்பர் திரு.யாக்கோப்பு சாமுவேல் அவர்கள், இவ்வழகிய ஆலயத்தின் கட்டிட கலைஞராகவும், பொறுப்பாளராகவும் நின்று இப்பாரிய பணியை இனிதே நிறைவேற்றி முடித்தார். அன்றைய ஆயர் கலாநிதி கெளரி யூலன் ஆண்டகையின் ஆக்கம் நிறைந்த பேருதவியும் பங்கு மக்களின் பலதரப்பட்ட ஆலய உன்னத வளர்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருந்தன.